Homeசெய்திகள்சினிமாஇன்று பிறந்தநாள் கொண்டாடும் திரைப்பிரபலங்கள்!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரைப்பிரபலங்கள்!

-

- Advertisement -

இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரைப்பிரபலங்கள்!இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரைப்பிரபலங்கள்!

செல்வராகவன்

தமிழ் சினிமாவின் தனித்துவ கலைஞன் என்ற புகழைப் பெற்றவர் இயக்குனர் செல்வராகவன். இவர் திரைத்துறையில் தன்னுடைய ஒவ்வொரு படங்களின் மூலமும் தான் யார் என்பதை நிரூபித்து வருகிறார். அந்த வகையில் இவருடைய இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன் திரைப்படம் உலகத்தரத்திலான படமாக அமைந்து பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அடுத்தது இவர் இயக்கிய புதுப்பேட்டை, 7G ரெயின்போ காலனி போன்ற படங்களை 2கே கிட்ஸ்கள் ரிப்பீட் மோடில் கண்டுகளித்து வருகின்றன. இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரைப்பிரபலங்கள்!மேலும் ஆயிரத்தில் ஒருவன் என்ற தமிழ் சினிமா பார்த்திடாத மாறுபட்ட ஃபேண்டஸி படத்தை கொடுத்து திரைக்கதை மெஜிசியனாக தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். தற்போது இவர் பல படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். மேலும் 7ஜி ரெயின்போ காலனி 2, மெண்டல் மனதில் போன்ற படங்களையும் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று (மார்ச் 5) செல்வராகவன் தனது 48 வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் ரசிகர்களும் திரைப்படங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வரலட்சுமி சரத்குமார்

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமாரின் 40 ஆவது பிறந்தநாள் இன்று. இவர் தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரைப்பிரபலங்கள்!அதன் பின்னர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த வரலட்சுமி வில்லி அவதாரம் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இவர் எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரத்தில் புல் எனர்ஜியுடன் நடித்து அசத்தி விடுவார். தற்போது இவர் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். இந்நிலையில் இவர் இன்று (மார்ச் 5) தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மீனாட்சி சௌத்ரி

மீனாட்சி சௌத்ரி மிஸ் இந்தியா அழகி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர். இவர் தெலுங்கு சினிமாவின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர். தற்போது இவர் தமிழிலும் நடித்து பெயர் பெற்று வருகிறார். இந்த வகையில் இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதை தொடர்ந்து விஜயின் கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றுள்ளார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரைப்பிரபலங்கள்!சமீபத்தில் வெளியான சங்கராந்திகி வஸ்துன்னம் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இவ்வாறு தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கும் மீனாட்சி சௌத்ரி இன்று (மார்ச் 5) தன்னுடைய 28 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ