spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதாதாசாகேப் பால்கே விருது ஒட்டுமொத்த மலையாள சினிமாவுக்கும் சொந்தமானது.... மோகன்லால் பேச்சு!

தாதாசாகேப் பால்கே விருது ஒட்டுமொத்த மலையாள சினிமாவுக்கும் சொந்தமானது…. மோகன்லால் பேச்சு!

-

- Advertisement -

நடிகர் மோகன்லால், தான் பெற்றுள்ள தாதாசாகேப் பால்கே விருது ஒட்டுமொத்த மலையாள சினிமாவுக்கும் சொந்தமானது என்று பேசியுள்ளார்.தாதாசாகேப் பால்கே விருது ஒட்டுமொத்த மலையாள சினிமாவுக்கும் சொந்தமானது.... மோகன்லால் பேச்சு!

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் மோகன்லால் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக இவரது நடிப்பில் ஹிருதயப்பூர்வம் திரைப்படம் வெளியானது. அடுத்தது வ்ருஷபா, த்ரிஷ்யம் 3 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இது தவிர தமிழில் ஜெயிலர் 2, ஏகே 64 ஆகிய படங்களில் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தாதாசாகேப் பால்கே விருது ஒட்டுமொத்த மலையாள சினிமாவுக்கும் சொந்தமானது.... மோகன்லால் பேச்சு!இந்நிலையில் மோகன்லாலுக்கு, திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை ஆற்றியதற்காக தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. நேற்று (செப்டம்பர் 23) டெல்லி, விஞ்ஞான் பவனில் நடைபெற்ற 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விருதை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, மோகன்லாலுக்கு வழங்கினார். விருதைப் பெற்றுக் கொண்ட மோகன்லால், “மலையாள சினிமாவின் பிரதிநிதியாக இந்த தேசிய அதிகாரத்தை பெற்றுக்கொள்கிறேன். இந்த தருணம் என்னுடையது மட்டும் இல்லை. இந்த விருது ஒட்டுமொத்த மலையாள சினிமாவுக்கும் சொந்தமானது. தாதாசாகேப் பால்கே விருது ஒட்டுமொத்த மலையாள சினிமாவுக்கும் சொந்தமானது.... மோகன்லால் பேச்சு!இதை மலையாள சினிமாவின் ஒட்டுமொத்த மரியாதையாக பார்க்கிறேன். இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டதும் வெறுமனே பெருமை அடையவில்லை. இது எங்கள் சினிமா பாரம்பரியத்தின் குரலாக என்னை தேர்வு செய்திருப்பதாக பெருமை அடைந்தேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இந்த தருணத்தை கனவில் கூட நினைத்ததில்லை” என்று பேசியுள்ளார்.

MUST READ