Homeசெய்திகள்சினிமாசந்தானத்தின் 'டிடி ரிட்டன்ஸ்' ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்!

சந்தானத்தின் ‘டிடி ரிட்டன்ஸ்’ ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்!

-

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிடி ரிட்டன்ஸ். இந்த படத்தை இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். ஆர் கே என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஆஃப்ரோ இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது.

இதில் சந்தானத்துடன் இணைந்து சுரபி, முனீஸ்காந்த், மொட்ட ராஜேந்திரன், ரெடி கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
காமெடி கலந்த ஹாரர் படமாக உருவாகிய அல்ல இப்படம் கடந்த ஜூலை 28ஆம் தேதி வெளியானது. அதைத் தொடர்ந்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் 25 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. ஏற்கனவே சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான பல திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. இதன் மூலம் சந்தானம் விட்ட இடத்தை பிடித்துள்ளார் என்றே கூறலாம்.

இந்நிலையில் இப்படம் வருகின்ற செப்டம்பர் 1 முதல் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ