இசையமைப்பாளர் இளையராஜா தனது இசையினால் ரசிகர்களின் சோகத்தை மறக்க வைக்கக் கூடியவர். அன்று முதல் இன்று வரை இவர் பலரின் ஃபேவரைட் இசையமைப்பாளராக வலம் வருகிறார். இவருடைய இசையையும் பாடல்களையும் ரசிக்காதவர்கள் எவரும் இலர். அதே சமயம் திரைத்துறையில் நடித்து வரும் திரை பிரபலங்களும் இவருடைய தீவிர ரசிகர்களாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் தனுஷ் இளையராஜாவின் தீவிர ரசிகனாக பக்தனாக நீண்ட நாட்களாகவே இளையராஜாவாகவே நடிக்க வேண்டும் என்று விரும்பியவர். அதன்படி தற்போது இளையராஜாவின் பயோபிக் படத்தில் நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்க உள்ளார்.
இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்த படத்திற்கு நடிகர் கமல்ஹாசன் திரைக்கதை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதேசமயம் இந்த படம் தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் ரசிகர்கள் பலரும் இந்த படத்திற்காக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து நடிகர் ரஜினி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடிகர்களாகவே நடிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. அதே சமயம் நடிகர் சிம்பு இந்த படத்தில் ஏ ஆர் ரஹ்மானாக நடிக்க இருக்கிறார் என்று புதிய தகவலும் சமூக வலைதளங்களை தீயாய் பரவி வருகிறது.
எனவே தனுஷ், சிம்பு காம்பினேஷனில் உருவாக உள்ள இந்த இளையராஜாவின் பயோ பிக் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய அளவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -