Homeசெய்திகள்சினிமாஅருண் விஜய்-க்காக தனுஷ் செஞ்ச அந்த விஷயம்..... கொண்டாட தயாராகும் ரசிகர்கள்!

அருண் விஜய்-க்காக தனுஷ் செஞ்ச அந்த விஷயம்….. கொண்டாட தயாராகும் ரசிகர்கள்!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக்கூடிய அருண் விஜய் தனக்கென ஏராளமான ரசிகர்களை செய்து எடுத்து வைத்திருக்கிறார். அருண் விஜய்-க்காக தனுஷ் செஞ்ச அந்த விஷயம்..... கொண்டாட தயாராகும் ரசிகர்கள்!அந்த வகையில் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான வணங்கான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் இவர் ரெட்ட தல படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை மான் கராத்தே பட இயக்குனர் க்ரிஷ் திருக்குமரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க அவருடன் இணைந்து தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி மற்றும் பலர் நடித்துள்ளனர். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம். சி.எஸ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அருண் விஜய்-க்காக தனுஷ் செஞ்ச அந்த விஷயம்..... கொண்டாட தயாராகும் ரசிகர்கள்!மேலும் இந்த படத்தின் டப்பிங் பணிகளும் நிறைவடைந்து இருப்பதாக ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய தகவல் என்னவென்றால், இந்த படத்தில் நடிகர் தனுஷ் பாடல் ஒன்றை பாடி இருப்பதாகவும், விரைவில் இது தொடர்பான படப்பிடிப்பு நடைபெறும் எனவும் தகவல் வெளியாகி வருகின்றன. இந்த தகவல் அருண் விஜய் ரசிகர்களுக்கும், தனுஷ் ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இது எந்த மாதிரியான பாடலாக இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே நடிகர் அருண் விஜய், தனுஷ் நடிப்பில் உருவாகும் இட்லி கடை திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ