நடிகர் தனுஷ் வடசென்னை 2 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.தென்னிந்திய திரை உலகில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தனுஷ் கோலிவுட் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என எல்லை தாண்டி சாதனை படைத்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் தற்போது இட்லி கடை, தேரே இஷ்க் மெய்ன் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இது தவிர D55, D56 ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இன்னும் பல படங்களை கமிட் ஆகியுள்ள தனுஷ் குபேரா எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படமானது வருகின்ற ஜூன் 20ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து முதல், பாடலும், டீசரும் போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 1) சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்ட தனுஷ், வடசென்னை 2 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது ஏற்கனவே வெளியான தகவலின் படி வடசென்னை 2 திரைப்படம் அடுத்த ஆண்டில் தொடங்கும் என்பதை உறுதி செய்துள்ளார் தனுஷ். இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இதன் அடுத்த பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிக அளவில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.