துருவ் விக்ரம் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அப்பா உடன் மகான் படத்தில் நடித்தார்.
அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாக இருக்கும் மற்றுமொரு புதிய படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.
கவின் நடிப்பில் வெளியான டாடா படத்தை இயக்கிய கணேஷ் பாபு இயக்கத்தில் துருவ் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
‘தாதா’ படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். டாடா 2022 ஆம் ஆண்டின் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படங்களில் ஒன்றாக மாறியது. முதல் படத்திலே மிகவும் தேர்ந்த இயக்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் இயக்குனர் கணேஷ் பாபு.
இந்நிலையில் அவர் துருவ் விக்ரம் உடன் இணைய இருப்பதாகக் கூறப்படுவது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.