spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அன்பு கணவர் அட்லீ

மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அன்பு கணவர் அட்லீ

-

- Advertisement -

நடிகரும், இயக்குநருமான அட்லீ தனது மனைவி பிரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றிய அவர் ராஜா ராணி படத்தின் வழியாக கோலிவுட்டுக்குள் என்ட்ரி கொடுத்தார். முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அட்லீ இரண்டாவது படத்திலேயே விஜய்யுடன் கூட்டணி அமைத்தார். 2016-ம் ஆண்டு இருவரின் கூட்டணியிலும் தெறி திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த ஆண்டில் மீண்டும் விஜய்யுடன் அட்லீ மற்றொரு படத்தை இயக்கினார்.

2017-ம் ஆண்டு வெளியான மெர்சல் திரைப்படம் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றது. விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது. இதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு பிகில் படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். இப்படத்தின் மூலம் பாலிவுட்டுக்கும் அட்லீ என்ட்ரி கொடுத்தார். இத்திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அட்லீயை இந்திய இயக்குநர்களுக்கு மத்தியில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக மாற்றியது.
we-r-hiring

இதனிடையே, 2014-ம் ஆண்டு அட்லீ தனது நீண்ட நாள் காதலி மற்றும் நடிகையுமான பிரியாவை திருமணம் முடித்துக்கொண்டார். இருவருக்கும் இந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், பிரியா அட்லீ இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அட்லீ பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

MUST READ