சிம்புவின் அம்மா, அப்பாவால் தான் பிரச்சனை… இயக்குநர் பாண்டிராஜ் பேட்டி…
- Advertisement -

பசங்க திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ். இதைத் தொடர்ந்து வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, இது நம்ம ஆளு, கதக்களி, நம்ம வீட்டு பிள்ளை, கடைக்குட்டி சிங்கம், எதற்கும் துணிந்தவன் என பல திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். சிவகார்த்திகேயன், சூர்யா, கார்த்தி, சிம்பு உள்பட பல முன்னணி நடிகர்களுடனும் இவர் இணைந்து பணியாற்றி இருக்கிறார். தற்போது இவரது இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இதனிடையே இது நம்ம ஆளு திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்கி இருந்தார். இதில் சிம்பு நாயகனாகவும், நயன்தாரா மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் நாயகிகளாகவும் நடித்திருந்தனர். இந்நிலையில் சிம்புவுக்கும் பாண்டிராஜூக்கும் பிரச்சனை என பல வதந்திகள் பரவின. இது தொடர்பாக பேட்டி ஒன்றில் பேசிய அவர், சோம்பேறிகளுடன் பணிபுரிவது எனக்கு எப்போதும் பிடிக்காது. அப்படிப்பட்டவர்களிடம் இருந்து நான் விலகி விடுவேன். அனைத்து திரைப்பட ஹீரோக்களுடனும் நல்ல நட்பு எனக்கு உள்ளது.

ஆனால், எனக்கும் சிம்புவுக்கும் இடையே பிரச்சனை உள்ளது என்ற செய்தி முற்றிலும் வதந்தி. அவருடைய அம்மா, அப்பாவுக்கும் எனக்கும் தான் பிரச்சனை. இது நம்ம ஆளு படப்பிடிப்பின்போது சிம்பு தாமதமாக வந்தாலும், விரைவில் படப்பிடிப்பு முடிந்துவிட்டு சென்றுவிடுவார். இவ்வளவு திறமையான நடிகர் இப்படி இருக்கிறாரே என்று வருத்தம் தான் பட்டிருக்கிறேன் என்று கூறினார்.