Homeசெய்திகள்சினிமாஇயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் கோலாகலம்... நட்சத்திர பட்டாளம் பங்கேற்பு...

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் கோலாகலம்… நட்சத்திர பட்டாளம் பங்கேற்பு…

-

இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா – தருண் கார்த்திகேயன் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

கோலிவுட் திரையுலகமே கொண்டாடும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர். தனது திரைப்படங்களில் பிரம்மாண்டத்தை காட்டி தனக்கென தனி ராஜாங்கம் நடத்தி வருகிறார். தமிழ் திரையுலகில் பல புதுமைகளை புகுத்தி இந்திய சினிமாவில் ஒரு படி மேலே சென்ற பெருமை இவருக்கு உண்டு. ஜென்டில்மேன் படத்தில் தொடங்கிய இவரது வெற்றிக்கணக்கு இன்று வரை நீண்டு கொண்டே செல்கிறது.
தற்போது தமிழில் இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் கேம் சேஞ்சர் ஆகிய படங்களை இவர் இயக்கி வருகிறார். விரைவில் இரண்டு திரைப்படங்களும் திரைக்கு வருகின்றன. இயக்குநர் ஷங்கருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா, இரண்டாவது மகள் அதிதி.

இதில் அதிதி கார்த்தி நடிப்பில் வௌியான விருமன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தில் நடித்திருந்தார். அடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இவரது அக்கா, ஐஸ்வர்யா கிரிக்கெட் வீரரான ரோஹித்தை திருமணம் செய்தார். ஆனால், அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. பல குற்றச்சாட்டுகளும எழுந்தன. இதையடுத்து, இருவரும் பிரிந்துவிட்டனர். தொடர்ந்து, அவருக்கு இரண்டாவது திருமணத்திற்கு நிச்சயமும் நடைபெற்றது

இந்நிலையில், இன்று ஐஸ்வர்யா ஷங்கர் மற்றும் தருண் கார்த்திகேயனின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்டனர். நடிகர் கார்த்தி மற்றும் சூர்யா ஆகியோரும் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

MUST READ