spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமுதலைவடிவ நெக்லஸின் மதிப்பு தெரியுமா? - ஊர்வசி ரவுத்தேலா ஆதங்கம்

முதலைவடிவ நெக்லஸின் மதிப்பு தெரியுமா? – ஊர்வசி ரவுத்தேலா ஆதங்கம்

-

- Advertisement -
முதலைவடிவ நெக்லஸின் மதிப்பு தெரியுமா? – ஊர்வசி ரவுத்தேலா ஆதங்கம்
கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலை வடிவ நெக்லஸ் அணிந்திருந்த பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா கேலி கிண்டலுக்கு ஆளான நிலையில் அந்த நெக்லஸின் மதிப்பு என்ன தெரியுமா என அவர் கொந்தளித்துள்ளார்.

முதலைவடிவ நெக்லஸின் மதிப்பு தெரியுமா? - ஊர்வசி ரவுத்தேலா ஆதங்கம்

நடிகையும் மாடல் அழகியுமான ஊர்வசி ரவுத்தேலா ஹிந்தியில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் லெஜன்ட் சரவணன் நடிப்பில் வெளியான தி லெஜன்ட் திரைப்படத்தில் டாக்டர் மதுமிதா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்திருந்தார்.

we-r-hiring

அண்மையில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நாள்தோறும் வித்தியாசமான உடைகளில் தோன்றி அசத்தினார்.

விழாவின் முதல் நாளில் பிங்க் நிற ஆடையில் தோன்றிய அவர் தங்கம் மற்றும் வைரத்தால் ஆன முதலை வடிவ நெக்லஸ் அணிந்திருந்தார்.

முதலைவடிவ நெக்லஸின் மதிப்பு தெரியுமா? - ஊர்வசி ரவுத்தேலா ஆதங்கம்

முதலை வடிவ நெக்லஸ் அணிந்து விழாவில் பங்கேற்ற ஊர்வசி ரவுத்தேலா சமூகவலைத்தளங்களில் கேலி கிண்டலுக்கு ஆளானார்.

விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ள அவர் அந்த நெக்லஸின் மதிப்பு யாருக்கும் தெரியவில்லை என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

முதலைவடிவ நெக்லஸின் மதிப்பு தெரியுமா? - ஊர்வசி ரவுத்தேலா ஆதங்கம்

பிரபல இத்தாலிய நடிகையான மோனிகா பெலூசி அந்த முதலை வடிவ நெக்லஸை கேன்ஸ் விழாவில் இரண்டு முறை அணிந்திருந்ததாகவும் அதனை ஒரு செண்டிமெண்டாக எண்ணி தானும் அணிந்ததாக ஊர்வசி ரவுத்தேலா விளக்கம் அளித்துள்ளார்.

இதனுடையே நெக்லஸின் மதிப்பு சுமார் 200 கோடி ரூபாய் இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

MUST READ