நடிகர் சூர்யாவிற்கு வில்லனாக துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு 6 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இதைத்தொடர்ந்து சூர்யா தனது 43 வது படத்தை சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கவுள்ளார்.
இந்த கூட்டணி ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான சூரரை போற்று திரைப்படத்தில் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் இரண்டாவது முறையாக சூர்யா 43 படத்தில் இணைய இருக்கிறது. இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இந்நிலையில் சமீபத்தில் சூர்யா, சுதா கொங்கரா, ஜிவி பிரகாஷ் கூட்டணியில் துல்கர் சல்மான் இணைய இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவலாக பகிரப்பட்டு வந்தன. தற்போது இதன் கூடுதல் தகவலாக, துல்கர் சல்மான் சூர்யாவிற்கு வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
துல்கர் சல்மான் தற்போது பான் இந்தியா நடிகராக உருவெடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த தகவல் வெளியாகியிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.