ஜிவி பிரகாஷ், கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். மிக பிரபலமான இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, மராத்தி, கன்னட உள்ளிட்ட மொழி படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.
தற்போது இவர் இசை அமைப்பது மட்டுமல்லாமல் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்கும் 100 படம் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படத்தின் கூட்டணியுடன் ஜிவி பிரகாஷ் மீண்டும் இணைய இருப்பதாக தெரியவந்துள்ளது.
சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, பரேஷ் ராவல் உள்ளிட்டோர் நடித்திருந்த திரைப்படம் ‘சூரரை போற்று’. இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார். இப்படம் இந்தியாவின் மலிவு விலை வானூர்தியை தொடங்க நினைத்து அதில் வெற்றியும் பெற்ற ஜி ஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. சூர்யாவின் 2D என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த இந்த படம் 5 தேசிய விருதுகளை பெற்றது மட்டும் அல்லாமல் தற்போது இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்திருந்த
நிலையில் சூர்யா, சுதா கொங்கரா, ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோரியின் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது.
இது குறித்து ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ” விரைவில் ஜி வி 100″ என்று பதிவிட்டுள்ளார்.
#GV100 🔜🔥. Let’s go
— G.V.Prakash Kumar (@gvprakash) July 18, 2023
இதன் மூலம் இந்த கூட்டணியின் புதிய படம் விரைவில் தொடங்க இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. மேலும் வருகின்ற ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் அன்று இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் சூர்யாவின் 43 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.