அஜித்துடன் டாப் தமிழ் நடிகர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அஜித் நடிப்பில் கடைசியாக ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் இணையப்போகும் அஜித் – ஆதிக் ரவிச்சந்திரனின் கூட்டணியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி இவர்களது கூட்டணியிலான தலைப்பிடப்படாத புதிய படத்தை (தற்காலிக தலைப்பு ஏகே 64) ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் அனிருத் இதற்கு இசையமைக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. 
மேலும் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகும் என சமீபத்தில் அஜித் அப்டேட் கொடுத்திருந்தார். எனவே ஆரம்பத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அறிவிப்பு வெளியான பின்னர் தான் இதன் படப்பிடிப்பு தொடங்கும் போல் தெரிகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் மோகன்லால், சுவாசிகா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்து வருகிறது. 
தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படத்தில் விஜய் சேதுபதி அல்லது ராகவா லாரன்ஸ் ஆகிய இருவர்களில் யாரேனும் ஒருவர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்களின் ஆர்வத்தை மிகப்பெரிய அளவில் தூண்டி உள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.


