துல்கர் சல்மானின் காந்தா பட டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் துல்கர் சல்மான் ஏராளமான தமிழ் ரசிகர்களையும் சேகரித்து வைத்திருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. அதே சமயம் இவர் தற்போது தனது 41வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவரது நடிப்பில் ‘காந்தா’ எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தை துல்கர் சல்மான் மற்றும் ராணா டகுபதி ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து ராணா டகுபதி, பாக்யஸ்ரீ போர்ஸ், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். 
ஜானு சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்க டேனி சன்செஷ் லோபஷ் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படமானது எம்.கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் படமானது வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு வருகின்ற நவம்பர் 6ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிரைலர் அறிவிப்பு வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


