மலையாள சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் பிரித்விராஜ் சுகுமாரன். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான லூசிபர் திரைப்படத்தை இயக்கி பெயர் பெற்றார். இதில் மோகன்லால், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் பிரித்விராஜ். இந்த படத்திற்கு எம்புரான் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை லைக்கா ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு துபாய், அமெரிக்கா, கேரளா போன்ற பகுதிகளை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்புகள் நாளை திருவனந்தபுரத்தில் தொடங்க இருப்பதாகவும் அங்கு 6 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து குட்டிக்கானம் பகுதியில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. பின்னர் அங்கிருந்து படக்குழு குஜராத்திற்கு செல்ல இருக்கிறதாம். அதாவது ஜூன் 15 ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 35 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறதாம். மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் லூசிபர் படத்தைப் போல லூசிபர் 2 – எம்புரான் திரைப்படமும் வசூல் ரீதியாக அடித்து நொறுக்கும் என்று நம்பப்படுகிறது.