Homeசெய்திகள்சினிமாமாறுபட்ட வேடத்தில் ஃபகத் ஃபாசில்... ஆவேஷம் படத்திற்கு வரவேற்பு...

மாறுபட்ட வேடத்தில் ஃபகத் ஃபாசில்… ஆவேஷம் படத்திற்கு வரவேற்பு…

-

மலையாள சினிமா மட்டுமன்றி, தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஃபகத் ஃபாசில். எல்லா படங்களிலும் தன்னுடைய ஆக்ரோஷமான நடிப்பினால் ஹீரோவையே மிஞ்சி விடுவார். கதாநாயகனாக நடித்திருந்தாலும் சரி வில்லனாக நடித்திருந்தாலும் சரி எந்த படம் என்றாலும் அதில் இவர்தான் ஹீரோ. மலையாளத் திரை உலகில் அறிமுகமான இவர் பல படங்களில் தன் நடிப்புத் திறமையை வெளிக்காட்டி வருகிறார். அதுமட்டுமில்லாமல் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் விக்ரம், புஷ்பா உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார்.

 

தமிழில் இறுதியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தில் ரத்தினவேல் என்ற கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதில் பகத் பாஸில் சாதி வெறி கொண்ட வில்லனாக நடித்திருந்தாலும் இவரின் அசாத்தியமான நடிப்பு ரசிகர்கள் இவரை கொண்டாடும் வகையில் அமைந்தது. தற்போது தெலுங்கில் உருவாகி வரும் புஷ்பா இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இது தவிர, ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படத்திலும் ஃபகத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் அண்மையில் வசூல் ரீதியாக மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘ரோமாஞ்சம்’. இந்தப் படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன், அடுத்ததாக இயக்கி உள்ள திரைப்படம் ஆவேஷம். இந்த படத்தில் ஃபகத் பாசில், நஸ்ரியா நாசிம், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிக்கின்றனர். சுஷின் ஷ்யாம் இசை அமைக்கும் இப்படத்தின் முதல் தோற்றத்தை அண்மையில் படக்குழு வெளியிட்டது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மாறுபட்ட வேடத்தில் ஃபகத் நடித்துள்ள இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

MUST READ