Homeசெய்திகள்சினிமாஃபகத் ஃபாசிலின் ஆவேஷம்... புதிய பாடல் வெளியீடு...

ஃபகத் ஃபாசிலின் ஆவேஷம்… புதிய பாடல் வெளியீடு…

-

நடிப்பில் அசுரனாக மாறும் மாபெரும் கலைஞர் ஃபகத் ஃபாசில். கதாநாயகனாக நடித்திருந்தாலும் சரி வில்லனாக நடித்திருந்தாலும் சரி எந்த படம் என்றாலும் அதில் இவர்தான் ஹீரோ. மலையாளத் திரை உலகில் அறிமுகமான இவர் பல படங்களில் தன் நடிப்புத் திறமையை வெளிக்காட்டி வருகிறார். அதுமட்டுமில்லாமல் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் விக்ரம், புஷ்பா உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் தமிழில் இறுதியாக மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்திருந்த இத்திரைப்படத்தில், ஃபகத் ஃபாசில் வில்லனாக நடித்திருந்தார். இவர் ஏற்று நடித்த ரத்னவேலு கதாபாத்திரம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தெலுங்கில் உருவாகி வரும் புஷ்பா இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இது தவிர, ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படத்திலும் ஃபகத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதுதவிர மலையாளத்தில் அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம், ஆவேஷம். ரோமாஞ்சம் படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஃபகத் பாசில், நஸ்ரியா நாசிம், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிக்கின்றனர். சுஷின் ஷ்யாம் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இத்திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது. ஆவேஷம் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

MUST READ