Homeசெய்திகள்சினிமாபிரபல மலையாள கதாசிரியர் மறைவு... திரையுலகினர் இரங்கல்...

பிரபல மலையாள கதாசிரியர் மறைவு… திரையுலகினர் இரங்கல்…

-

மலையாள திரையுலகின் பிரபல கதாசிரியர் மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழந்து இருப்பது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

மலையாள திரையுலகின் முன்னணி கதாசிரியர்களில் ஒருவர், நிஜாம் ராவுத்தர். இவர் ஜக்காரியாவின் கர்ப்பிணிகள் என்ற திரைப்படத்தின் மூலம் கதாசிரியராக மோலிவுட் திரையுலகில் அறிமுகமானார். இவர் கேரள மாநில அரசின் விருதுகளை வென்றுள்ளார். திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக அவர் பத்திரிகையாளராகவும் பணியாற்றி இருக்கிறார். மேலும், பாம்பே மிட்டாய், ரேடியோ உள்ளிட்ட தமிழ் படங்களுக்கும் இவர் திரைக்கதை எழுதி இருக்கிறார். இவரது ஒரு பாரத சர்க்கார் உல்பனம் என்ற திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும், கடந்த சில நாட்களுக்கு முன்பாக இப்படத்தின் போஸ்டரை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு,படம் விரைவில் வெளியாகும் என்றும் அறிவித்திருந்தார்.

இவர் கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் இன்று காலை திடீரென உயிரிழந்தார். 49 வயதான நிஜாம், மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்து இருக்கின்றனர். மறைந்த நிஜாமிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

MUST READ