அஜித் தற்போது தனது 62 ஆவது படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தடம், தடையற தாக்க, கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்குகிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சுபாஷ்கரன் இந்த படத்தை தயாரிக்கிறார். அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் அஜித், அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் திரிஷா, கயல் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் அஜித்தும் திரிஷாவும் கணவன் மனைவியாக நடித்து வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக அர்ஜுன் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.இந்த படத்தின் படப்பிடிப்புகள் அஜர் பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் படத்தின் படப்பிடிப்புகள் 50% நிறைவு பெற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இது சம்பந்தமான அறிவிப்பை நெட்ஃப்ளிக்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடாமுயற்சி படத்தின் வெளியீட்டிக்கு பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நெட்ஃப்ளிக்ஸ் இல் ஒளிபரப்பாகும் என்றும் தெரிவித்துள்ளது.