Homeசெய்திகள்சினிமாநீயெல்லாம் ஒரு மனுசனா?.... தனுஷை வெளுத்து வாங்கிய பிரபல தயாரிப்பாளர்!

நீயெல்லாம் ஒரு மனுசனா?…. தனுஷை வெளுத்து வாங்கிய பிரபல தயாரிப்பாளர்!

-

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். இவர் கடந்த 2004 இல் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நீயெல்லாம் ஒரு மனுசனா?.... தனுஷை வெளுத்து வாங்கிய பிரபல தயாரிப்பாளர்!இவர்கள் இருவருக்கும் யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கிறார்கள். இருப்பினும் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2022-ல் இருவரும் திருமண உறவில் இருந்து பிரிவதாக அறிவித்தனர். அதன் பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனுஷ், ஐஸ்வர்யாவின் திருமணம் செல்லாது என தங்களுக்கு விவாகரத்து தரும்படி மனு கொடுத்திருந்தனர். தொடர்ந்து குடும்ப நல நீதிமன்றம் இருவரையும் ஆஜராக உத்தரவிட்டது. இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் கே ராஜன், தனுஷ் குறித்து பேசியுள்ளார். நீயெல்லாம் ஒரு மனுசனா?.... தனுஷை வெளுத்து வாங்கிய பிரபல தயாரிப்பாளர்!நீ எல்லாம் ஒரு மனுஷனா? உனக்கு எதற்கு பல பெண்களுடன் வாழ்க்கை. ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் தமிழ் பண்பாடு. எதையும் நேரடியாக சொல்லக்கூடாது என்று நினைத்தேன். ஆனால் என்னுடைய மனசு கேட்கவில்லை. தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் போலி வாழ்க்கை வாழ்கின்றனர். படத்தில் நடிப்பது போன்ற இருவரும் நிஜ வாழ்க்கையிலும் நடித்துக் கொண்டிருக்கின்றனர். இருவரும் குழந்தைகளுக்காக சேர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்” என்று சமீபத்தில் நடந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

MUST READ