spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபெங்களூரில் தூள் கிளப்பிய விஜய் ஆண்டனி... இசை கச்சேரி கோலாகலம்...

பெங்களூரில் தூள் கிளப்பிய விஜய் ஆண்டனி… இசை கச்சேரி கோலாகலம்…

-

- Advertisement -
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபரவர் விஜய் ஆண்டனி. இவர், நடிப்பு மட்டுமன்றி இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட ஆசிரியர், பாடல் ஆசிரியர், ஆடியோ இன்ஜினியர் என பன்முகத் திறமை கொண்டவர். 2005-ம் ஆண்டு இசை அமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, 2014-ம் ஆண்டு வெளியான சலீம் படத்தின் மூலம் நடிகராக சினிமாவுக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, சலீம் இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பை பெற்றது.நடிப்பு மட்டுமன்றி இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட ஆசிரியர், பாடல் ஆசிரியர், ஆடியோ இன்ஜினியர் என பன்முகத் திறமை கொண்டவர். 2005-ம் ஆண்டு இசை அமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, 2014-ம் ஆண்டு வெளியான சலீம் படத்தின் மூலம் நடிகராக சினிமாவுக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, சலீம் இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதோடு அவருக்கு பெயரையும், புகழையும் பெற்றுக் கொடுத்து முன்னணி நடிகராகவும் உயர்த்தியது. நடிகர் விஜய் ஆண்டனி, நாகர்கோவிலைச் சேர்ந்த பாத்திமா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மீரா, லாரா என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அதில், மூத்த மகள் சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி மீண்டும் இசை கச்சேரியை நடத்த திட்டமிட்டிருந்தார். அதன்படி பெங்களூரில் விஜய் ஆண்டனியின் இசைக்கச்சேரி கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

MUST READ