பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே சமயம் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படமும் தில் ராஜு தயாரிப்பில் உருவாகி வருகிறது. தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் ராம்சரண் உடன் இணைந்து கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா, அஞ்சலி, சுனில், சமுத்திரக்கனி, ஜெயராம் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். எஸ் ஜே சூர்யா படத்தில் வில்லனாக நடித்த வருகிறார்.
அரசியல் கதைகளத்தில் இப்படம் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த படத்தில் ராம்சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரையிட படக்குழுவின் திட்டமிட்டுள்ளனர். படத்திலிருந்து முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், தள்ளிப்போவதாக தெரிவித்தது. வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் பாடல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகை அஞ்சலி கேம் சேஞ்சர் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். மைசூரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில், அஞ்சலி மற்றும் ராம்சரண் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. மைசூரில் அடுத்த 15 நாட்களுக்கு படப்பிடிப்பு நடைபெறும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.