spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஏகபோக வரவேற்பை பெறும் கருடன்... இரண்டாம் நாளில் இரட்டிப்பான முன்பதிவு...

ஏகபோக வரவேற்பை பெறும் கருடன்… இரண்டாம் நாளில் இரட்டிப்பான முன்பதிவு…

-

- Advertisement -
கருடன் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, இரண்டாம் நாளுக்கான டிக்கெட் முன்பதிவு இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.

கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் சூரி, கடந்த ஆண்டு வெளியான விடுதலை திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படத்தை வெற்றி மாறன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்திற்கு வெற்றி கிடைத்ததை தொடர்ந்து, இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இதனிடையே, சூரி நடித்திருக்கும் புதிய திரைப்படம் தான் கருடன். இத்திரைப்படத்தை துரை செந்தில் குமார் இயக்கியிருக்கிறார்.

we-r-hiring
இத்திரைப்படத்தில் சூரியுடன் இணைந்து சசிகுமார், மலையாள பிரபலம் உன்னி முகுந்தன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைந்திருந்தார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் முன்னரே வெளியாகி ஹிட் அடித்தன. இந்நிலையில், இத்திரைப்படம் கடந்த மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. கிராம பின்னணியில் மண்மனம் மாறாத கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வரும் நிலையில், இரண்டாம் நாளுக்கான டிக்கெட் முன்பதிவு, முதல் நாளை காட்டிலும் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. முதல் நாளில் கருடன் திரைப்படத்திற்கு 70 ஆயிரம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நிலையில், இரண்டாம் நாளில் சுமார் ஒரு லட்சத்து 14 ஆயிரம் பேர் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்திருக்கின்றனர்.

MUST READ