Homeசெய்திகள்சினிமாஇளையராஜா குரலில் வெளியான 'கிஃப்ட்' பட மியூசிக்கல் ஃபர்ஸ்ட் லுக்!

இளையராஜா குரலில் வெளியான ‘கிஃப்ட்’ பட மியூசிக்கல் ஃபர்ஸ்ட் லுக்!

-

- Advertisement -

கிப்ட் படத்தின் மியூசிக்கல் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

பிரேமம், நேரம் ,கோல்ட் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக டான்ஸ் மாஸ்டர் சாண்டியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். கிப்ட் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மியூசிக்கல் பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகியுள்ளது.

we-r-hiring

இசைஞானி இளையராஜாவின் மயக்கும் குரலில் ஒரு ஹம்மிங்குடன் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அல்போன்ஸ் புத்திரன், இளையராஜா, சாண்டி என ஒரு வித்தியாசமான காம்போவில் இப்படம் உருவாகி வருகிறது. இதில் சாண்டி மாஸ்டர் உடன் இணைந்து கோவை சரளா, சஹானா சர்வேஷ், ராகுல், சார்லி, ரேச்சல் ரெபேக்கா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஆடியோ உரிமையை பிரபல சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ