குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடல் நாளை மறுநாள் வெளியாகும் என புதிய தகவல் கிடைத்துள்ளது.
அஜித் நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து குட் பேட் அக்லி திரைப்படம் 2025 ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தை மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இதில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் மற்றும் பலர் நடித்துள்ளனர். நடிகர் அஜித் இந்த படத்தில் நெகட்டிவ் ஷேடட் ரோலில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. நடிகை திரிஷா இப்படத்தில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து டீசர் வெளியாகி இணையத்தை கலக்கியது. அடுத்தது இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகும் என சமூக வலைதளங்களை செய்திகள் பரவி வருகின்றன. அதன்படி இந்த படத்தின் முதல் பாடல் ஜெயிலில் நடக்கும் பாடலாக இருக்கும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நாளை மறுநாள் (மார்ச் 9) அல்லது மார்ச் 10 அல்லது மார்ச் 12-ல் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் அப்டேட் கிடைத்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.