Homeசெய்திகள்சினிமா'குட் பேட் அக்லி' இரண்டாவது பாடல் ரெடி.... ரிலீஸ் எப்போது?

‘குட் பேட் அக்லி’ இரண்டாவது பாடல் ரெடி…. ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

குட் பேட் அக்லி படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.'குட் பேட் அக்லி' இரண்டாவது பாடல் ரெடி.... ரிலீஸ் எப்போது?

அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. அதே சமயம்
ஆதிக் ரவிச்சந்திரன், இந்த படமானது அப்பா – மகன் உறவை மையமாக வைத்து எமோஷனல் கலந்த கேங்ஸ்டர் படமாக உருவாகி இருக்கிறது என அப்டேட் கொடுத்திருக்கிறார். எனவே வருகின்ற ஏப்ரல் 10 அன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வரும் குட் பேட் அக்லி படத்தினை திரையில் காண ரசிகர்கள் பேரார்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.'குட் பேட் அக்லி' இரண்டாவது பாடல் ரெடி.... ரிலீஸ் எப்போது? இதற்கிடையில் ரசிகர்கள் அஜித்தை எப்படி எல்லாம் பார்க்க நினைத்தார்களோ, அப்படியெல்லாம் இந்த படத்தின் டீசரில் அஜித்தை காண முடிந்தது. எனவே இந்த டீசரை ரசிகர்கள் முழுவதுமாக கொண்டாடி தீர்ப்பதற்குள் இந்த படத்தில் இருந்து OG சம்பவம் எனும் பாடலும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அதாவது ஜி.வி. பிரகாஷ், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் இணைந்து பாடி இருந்த இந்த பாடல் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.'குட் பேட் அக்லி' இரண்டாவது பாடல் ரெடி.... ரிலீஸ் எப்போது? இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடல் தயாராகி விட்டதாகவும் அடுத்த வாரம் இப்பாடல் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் இப்பாடலானது ஜெயில் பாடல் என்றும் இந்த பாடல் பிரம்மாண்டமாக தயாராகி உள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

 

MUST READ