Homeசெய்திகள்சினிமாஉருவாகிறது சுழல் 2-ம் பாகம்... 96 பட நடிகைக்கு வாய்ப்பு...

உருவாகிறது சுழல் 2-ம் பாகம்… 96 பட நடிகைக்கு வாய்ப்பு…

-

சுழல் 2-ம் பாகத்தில் பிரபல நடிகை ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான தொடர் சுழல். இந்த இணைய தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. புகழ்பெற்ற விக்ரம் வேதா திரைப்படத்தை இயக்கிய புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் உருவான இந்த தொடர் கடந்த ஆண்டு பெரும் வரவேற்பை பெற்ற இணைய தொடர்களில் ஒன்று. இதில் பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஸ், கதிர், ஸ்ரேயா ரெட்டி, இளங்கோ, நிவேதிதா சதீஷ், ஹரீஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்ளில் நடித்திருந்தனர். மலைக் கிராமத்தில் காணாமல் போன சிறுமியை தேடும் க்ரைம் திரில்லர் கதையாக இந்த தொடர் உருவானது.

பல திருப்பங்களுடன் கூடிய கதைக்களத்தில் சுழல் தொடர் உருவானது. இந்த வரவேற்பைத் தொடர்ந்து சுழல் தொடரின் இரண்டாம் பாகம் உருவாகிறது. இதில், நடிகை கௌரி கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தவிர, கௌரி கிஷன் லவ் அன்டர் கன்ஸ்ட்ரக்‌ஷன் என்ற இணைய தொடரிலும் நடித்து உள்ளார். இத்தொடரில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தொடரை புஷ்கர் காயத்ரி இயக்குவார்களா எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

MUST READ