Homeசெய்திகள்சினிமாஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'லப்பர் பந்து'.... ட்ரைலர் குறித்த அறிவிப்பு!

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘லப்பர் பந்து’…. ட்ரைலர் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் லப்பர் பந்து படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'லப்பர் பந்து'.... ட்ரைலர் குறித்த அறிவிப்பு!

நடிகர் ஹரிஷ் கல்யாண் பொறியாளன், சிந்து சமவெளி ஆகிய படங்களின் மூலம் திரைத்துறையில் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர். இருப்பினும் ப்யார் பிரேமா காதல், ஓ மணப்பெண்ணே ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியான பார்க்கிங் திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. இதற்கிடையில் ஹரிஷ் கல்யாண், டீசல், நூறு கோடி வானவில் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அதில் டீசல் திரைப்படம் 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் லப்பர் பந்து எனும் திரைப்படமும் உருவாகி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து அட்டகத்தி தினேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை கனா
, எஃப் ஐ ஆர் போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய தமிழரசன் பச்சமுத்து இயக்கி இருக்கிறார்.

we-r-hiring

இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் இதற்கு இசை அமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்தத நிலையில் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களும் பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்நிலையில் லப்பர் பந்து படத்தின் டிரைலர் வருகின்ற ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாக இருப்பதாக பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் அந்த போஸ்டரில் லப்பர் பந்து திரைப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ