பிரபல இந்தி பாடகர் உஸ்தாத் ரஷித் கான் மரணம்
- Advertisement -
மியூசிக் மேஸ்ட்ரோ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் உஸ்தாத் ரஷீத் கான் என்பவர் இன்று மரணம் அடைந்தார்.

உஸ்தாத் ரஷீத் கானுக்கு வயது 55. 1968-ம் ஆண்டு பிறந்த அவர், ஹிந்துஸ்தானி இசை பாரம்பரியத்தின் பாரம்பரிய இசைக்கலைஞர். அவர் ராம்புரா கரானாவைச் சேர்ந்தவர். மேலும், இனாயத் ஹூசைன் கானின் பேரன் ஆவார். 2022-ம் ஆண்டில் ஒன்றிய அரசு மூன்று உயரிய விருதுகளான பத்ம பூஷன் விருதை வழங்கி கௌரவப்படுத்தியது. இவர் ஹிந்துஸ்தானி இசை கலைஞராக இருந்தாலும், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்களில் அவர் பாடல்கள் பாடி இருக்கிறார்.

இவர் கடந்த சில ஆண்டுகளாக புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். கொல்கத்தாவில் உள்ள பீர்லெஸ் மருத்துவமனையில் அவர் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். பலர் இணையத்தில் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து நாளை அவரது குடும்ப முறைப்படி இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது.