- Advertisement -
பிரபல பாலிவுட் நடிகை சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட கேக் வெட்டி தனது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடி உள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஊர்வசி ரவுத்தலா. இவர் தொடக்கத்தில் ஆல்பம் பாடல்களில் நடித்துக் கொண்டிருந்தார். பின்னர் திரைக்கு வந்த அவர், அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். இது தவிர, இந்தியில் பல படங்களில் ஒரு பட பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், தமிழில் முதல்முறையாக லெஜண்ட் சரவணன் நடித்த படத்தில் நாயகியாக அறிமுகமானார். இதன் மூலம் அவர் தென்னிந்திய சினிமாவுக்கு அறிமுகமானார்.
ஊர்வசி தற்போது பிரபல பாலிவுட் பாடகர் யோ யோ ஹனி சிங்குடன் இணைந்து செகண்ட் டோஸ் என்ற மியூசிக் ஆல்பத்தில் பணியாற்றி வருகிறார். இந்த பாடலின் படப்பிடிப்பு மற்றும் இசைக்கோர்ப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நடிகை ஊர்வசி தனது 30-து பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார். அவரது பிறந்தநாள் விழாவின்போது பாடகர் ஹனி சிங் விலை மதிப்பு மிக்க கேக் ஒன்றை வழங்கி உள்ளார்.
HAPPY Birthday My 'Ambara Di Queen' 🎂😘♥️#HappyBirthdayUrvashiRautela @UrvashiRautela x @asliyoyo #YoYoHoneySingh #UrvashiRautela pic.twitter.com/XZqi0D13aD
— Urvashi Rautela ❤️ (@AsliUrvashians) February 25, 2024
