இட்லி கடை படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த அக்டோபர் 1ஆம் தேதி ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘இட்லி கடை‘. உலகம் முழுவதும் வெளியான இந்த படத்தை தனுஷ் தானே இயக்கி, நடித்திருந்தார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரித்திருந்தது. ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன், சத்யராஜ், ராஜ்கிரண், அருண் விஜய், ஷாலினி பாண்டே மற்றும் பலர் நடித்திருந்தனர்.
கிராமத்து பின்னணியில் இட்லி கடையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 9 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. அதாவது ‘ராயன்’ படத்திற்கு பிறகு நல்ல ஒரு பீல் குட் படத்தை கொடுத்துள்ளார் தனுஷ். படத்தில் இடம்பெற்ற அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் இந்த படம் தற்போது வரை உலகம் முழுவதும் ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே தயாரிப்பாளருக்கும், தமிழ்நாடு விநியோகஸ்தர்களுக்கும் லாபத்தை ஈட்டி தந்துள்ள இந்த படத்தின் வசூல் இனிவரும் நாட்களிலும் அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


