Homeசெய்திகள்சினிமா30 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'இந்தியன் 2' பட பாடல்!

30 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ‘இந்தியன் 2’ பட பாடல்!

-

- Advertisement -

1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சங்கர் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார். 30 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தியன் 2 பட பாடல்!இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, காஜல் அகர்வால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகவே இருந்து வருகிறது. இருப்பினும் இந்த படம் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு இன்னும் ரிலீஸ் ஆகாமல் நிலுவையில் இருக்கிறது. இதற்கிடையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அதைத் தொடர்ந்து சித்தார்த் – பிரியா பவானி சங்கர் ஆகிய இருவருக்குமான பாடல் ஒன்று படமாக்கப்பட்டது. 30 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தியன் 2 பட பாடல்!ஆகவே படக்குழுவினர் அடுத்தபடியாக படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய பாடலை படமாக்க உள்ளனராம். அதாவது இந்த பாடல் நடிகர் கமல்ஹாசனுக்கான பாடலாம். இந்த பாடலை இயக்குனர் சங்கர், 30 கோடி பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டுள்ளாராம்.30 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தியன் 2 பட பாடல்! ஏற்கனவே இயக்குனர் சங்கர் தனது படங்களில் இடம்பெறும் பாடல்களை பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடுவார். அந்த வகையில் இந்தியன் 2 படத்தில் இடம் பெற உள்ள இந்த பாடலும் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடும் என்று நம்பப்படுகிறது.

MUST READ