spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதென் ஆப்பிரிக்காவில் பிரம்மாண்டமான ட்ரெயின் ஆக்ஷன்... அசத்திய 'இந்தியன் 2' டீம்!

தென் ஆப்பிரிக்காவில் பிரம்மாண்டமான ட்ரெயின் ஆக்ஷன்… அசத்திய ‘இந்தியன் 2’ டீம்!

-

- Advertisement -

‘இந்தியன் 2’ படக்குழுவினர் தென் ஆப்பிரிக்காவில் மிகப் பிரமாண்டமான ட்ரெயின் ஆக்சன் காட்சி படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர்.

கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தியன் 2 தற்போது மீண்டும் வெகுண்டு எழுந்துள்ளது. ‘இந்தியன் 2’ படத்தில் படப்பிடிப்பு தைவான் நாட்டில் நடைபெற்றது. அதையடுத்து படக்குழுவினர் தற்போது தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளனர். ஷங்கர், கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு எடுத்தக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின.

we-r-hiring

இந்தியன் 2‘ படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வந்தது. அங்கு மிகப் பிரமாண்டமான முறையில் ஒரு ட்ரெயின் ஆக்சன் காட்சி படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் இருவரும் இந்தியா திரும்ப உள்ளனர்.

இந்திய திருமபியதும் இயக்குனர் ஷங்கர், ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பை நடத்தி முடிக்க உள்ளார்.

இந்தியன் 2’ படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ