Homeசெய்திகள்சினிமாவிரைவில் தொடங்கும் இன்று நேற்று நாளை 2 & பீட்சா 4 படப்பிடிப்பு.... பூஜை வீடியோ...

விரைவில் தொடங்கும் இன்று நேற்று நாளை 2 & பீட்சா 4 படப்பிடிப்பு…. பூஜை வீடியோ வெளியீடு!

-

கடந்த 2015 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் ஆர். ரவிக்குமார் இயக்கியிருந்த படம் இன்று நேற்று நாளை. டைம் டிராவல் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் கார்த்திக் பொன்ராம் இயக்க இருக்கிறார். விரைவில் தொடங்கும் இன்று நேற்று நாளை 2 & பீட்சா 4 படப்பிடிப்பு.... பூஜை வீடியோ வெளியீடு!

விஜய் சேதுபதி நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்த படம் பீட்சா. ஹாரர் திரில்லர் கதை களத்தில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்டை வைத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் படத்தின் இயக்குனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து பீட்சா 2, பீட்சா 3 கொஞ்சம் படங்கள் வெளியாகின. அடுத்தபடியாக பீட்சா 4 திரைப்படம் தொடங்க இருக்கிறது. இந்த படத்தில் அபி ஹாசன் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இது தொடர்பான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எனவே இன்று நேற்று நாளை 2 மற்றும் பீட்சா 4 ஆகிய இரு படங்களின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்நிலையில் முழு பூஜை வீடியோவையும் பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த இரண்டு படங்களையுமே திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ