spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'சிங்கப்பூர் சலூன்' படத்தில் மணிரத்னம் பட ஹீரோவா?..... வெளிவந்த ரகசியம்!

‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் மணிரத்னம் பட ஹீரோவா?….. வெளிவந்த ரகசியம்!

-

- Advertisement -

சிங்கப்பூர் சலூன் படத்தில் மணிரத்னம் பட ஹீரோவா?..... வெளிவந்த ரகசியம்!ஆர் ஜே பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள படம் சிங்கப்பூர் சலூன். இப்படத்தில் சத்யராஜ், லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் லோகேஷ் கனகராஜ், ஜீவா உள்ளிட்டோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை கோகுல் இயக்கியுள்ளார். விவேக் சிவா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் அதை தொடர்ந்து ட்ரைலரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சிங்கப்பூர் சலூன் படமானது காமெடி, காதல், எமோஷன்ஸ் அனைத்தும் கலந்த கதை அம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது. இப்படம் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

இதற்கிடையில் சிங்கப்பூர் சலூன் படத்தின் பிரஸ் மீட் ஒன்றில் ஆர் ஜே பாலாஜி, படத்தில் முக்கியமான நடிகர் ஒருவர் நடித்திருப்பதாகவும் அதனை பட குழுவினர் சீக்ரட்டாக வைத்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

we-r-hiring

எனவே அந்த நடிகர் யாராக இருக்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. எனவே அந்த நடிகர் விஜய் சேதுபதியாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது. சிங்கப்பூர் சலூன் படத்தில் மணிரத்னம் பட ஹீரோவா?..... வெளிவந்த ரகசியம்!ஆனால் தற்போது அந்த நடிகர் விஜய் சேதுபதி இல்லை எனவும் வேறு ஒரு நடிகர் தான், லோகேஷ் கனகராஜ் மற்றம் ஜீவாவை போல் கேமியோ ரோலில் நடித்துள்ளார் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி அந்த சீக்ரட்டான நடிகர் வேறு யாரும் இல்லை. அரவிந்த்சாமி தான் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரவிந்த்சாமி கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கஸ்டடி படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து கார்த்தி 27 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ