நடிகர் ரஜினி ஜெயிலர் படத்திற்கு பிறகு டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க அடுத்ததாக ரஜினி, பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். படம் சம்பந்தமான அறிவிப்பை ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய நிலையில் நேற்று திடீரென படத்தின் ரஜினி லுக்கை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்த போஸ்டரில் ரஜினியின் கைவிலங்கு, கண்ணாடி இது தெரியும் பிரதிபலம் போன்றவை வாட்ச்களை காண்பித்திருந்தது. எனவே இந்த படம் வாட்ச் சம்பந்தமான கதைக்களமாக இருக்கலாம் என்று செய்திகள் வெளியாகி வருகின்றனர். அதே சமயம் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் கதையை கமலிடம் சொல்லும் போது ஒரு மொபைல் கடையை மையமாக வைத்த கதையை தான் முதலில் கூறினாராம்.
அதன் பிறகு கதையில் பட்டி டிங்கரிங் செய்யப்பட்டு விக்ரம் படமாக உருவானதாம். இப்போது சொல்ல வருவது என்னவென்றால், கமலிடம் லோகேஷ் சொன்ன கதையில் வரும் மொபைல் கதைதான் இப்போது வாட்ச் கதையாக மாறி இருக்கிறதா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும் லோகேஷ், ரஜினிக்காக எந்த மாதிரியான கதையை தயார் செய்து வைத்திருப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- Advertisement -