Homeசெய்திகள்சினிமா'ஜெயிலர்' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்!

‘ஜெயிலர்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்!

-

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் உருவாகி இருந்தது. அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். இதில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. வெளியான ஒரே வாரத்தில் உலக அளவில் 375 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து இரண்டாவது வாரமும் வெற்றிகரமாக திரையரங்குகளில் கொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது .
இப்படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக இப்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்த போதிலும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

MUST READ