Homeசெய்திகள்சினிமாஅம்பேத்கரையும், காந்தியையும் பார்க்க வேண்டும்... ஜான்வி கபூர் விருப்பம்...

அம்பேத்கரையும், காந்தியையும் பார்க்க வேண்டும்… ஜான்வி கபூர் விருப்பம்…

-

- Advertisement -
தமிழ் சினிமாவில் எண்பதுகளில் கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீ தேவி. இவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது அவர் டோலிவுட்டிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். தொடக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்த தேவரா படத்தின் மூலம் அறிமுகமான அவர், அடுத்தடுத்து ராம்சரண் என தெலுங்கு படத்தில் கமிட்டாகி வருகிறார்.

இரண்டாவது மகள் குஷி கபூர், ஆர்ச்சிஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அண்மையில் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். அவரும் தற்போது அடுத்தடுத்து கமிட்டாகி வருகிறார். தற்போது ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகி இருக்கும் மிஸ்டர் அன்ட் மிஸஸ் மாஹி திரைப்படம் வரும் மே மாதம் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதையொட்டி அவர் படத்தின் புரமோசன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் தனக்கு வரலாற்று ஆர்வம் அதிகமாக இருப்பதாக கூறிய அவரிடம், வரலாற்றில் எந்த காலகட்டத்திற்கு செல்ல ஆசைப்படுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், சாதி குறித்த தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருந்த அம்பேத்கர் மற்றும் காந்தியின் காலத்திற்கு செல்ல ஆசைப்படுகிறேன் என்றார்.

MUST READ