கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படம் வரும் டிசம்பர் 11-ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்தி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வௌியான திரைப்படம் பொன்னியின் செல்வன். வந்தியத் தேவனாக நடித்து பலரின் மனதை கவர்ந்தார் நடிகர் கார்த்தி. பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு கார்த்தி நடித்த திரைப்படம் ஜப்பான். இது அவரது 25-வது திரைப்படமாகும். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ராஜூ முருகன் இயக்கிய இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்திருந்தார். சுனில், விஜய் மில்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ஹெய்ஸ்ட் கதையை மையப்படுத்தி உருவான இத்திரைப்படம் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஜப்பான் திரைப்படம், எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. வசூலிலும் படத்திற்கு ஏமாற்றமே கிடைத்தது. ஜப்பான் படத்தைத் தொடர்ந்து கார்த்தி தனது 26-வது படத்தில் நடித்து வருகிறார். நலன் குமாரசாமி இப்படத்தை இயக்குகிறார். தெலுங்கு பிரபலம் கிருத்தி ஷெட்டி, சத்யராஜ் ஆகியோர் படத்தில் நடிக்கின்றனர். இதைத் தொடர்ந்து 96 பட இயக்குநர் பிரேம்குமாருடன் தனது 27-வது படத்திலும் கார்த்தி ஒப்பந்தாகி உள்ளார்.
இப்படத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். கும்பகோணத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜப்பான் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 11-ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ஜப்பான் திரைப்படம் வெளியாகிறது.