Homeசெய்திகள்சினிமாஇமாலய வசூலை எட்டிய ஷாருக்கான், அட்லீ காம்போவின் ஜவான்!

இமாலய வசூலை எட்டிய ஷாருக்கான், அட்லீ காம்போவின் ஜவான்!

-

- Advertisement -

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன் நடிப்பில் அனிருத் இசையமைத்து கடந்த 7ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ஜவான். ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்து வெளியிட்ட ஜவான் திரைப்படம் வசூலில் பின்னி வருகிறது. இப்படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரமே ஆகியுள்ள நிலையில் 660 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்துள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. மாஸ், ஆக்சன், சென்டிமெண்ட் என ஒரு பக்கா கமர்சியல் என்டர்டைன்மென்ட் படமாக வெளியான ஜவான் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அடுத்து வரும் நாட்களும் வார இறுதி நாட்கள் என்பதால் ஜவானுக்கு பெரிய வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்னும் சில நாட்களில் இப்படம் 1000 கோடி கிளப்பில் இணைய உள்ளது. பதான், ஜவான் என அடுத்தடுத்து 1000 கோடி வசூலை சாத்தியமாக்கி பாக்ஸ் ஆபீஸ் கிங் என நிரூபித்து இருக்கிறார் ஷாருக்கான். அட்லியின் பிரம்மாண்ட மேக்கிங், படத்திற்கு வலு சேர்த்ததால் இப்படம் வட இந்தியாவில் மட்டும் இன்றி அனைத்து இந்திய மொழிகளிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. மேலும் போட்டிக்கு தற்போது பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை என்பதால் ஜவான் எதிர்வரும் நாட்களிலும் நல்ல வசூலையே தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ