spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஜெயம்ரவியின் காதலிக்க நேரமில்லை... படக்குழு கொடுத்த புதிய அப்டேட்...

ஜெயம்ரவியின் காதலிக்க நேரமில்லை… படக்குழு கொடுத்த புதிய அப்டேட்…

-

- Advertisement -
ஜெயம்ரவி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் காதலிக்க நேமில்லை என்ற திரைப்படத்திலிருந்து புதிய கிளிம்ப்ஸ் வீடியோ நாளை வௌியாகிறது.

கோலிவுட்டில் வளர்ந்து வரும் இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவர் கிருத்திகா உதயநிதி. இவர், ஒரிரு திரைப்படங்களே இயக்கியிருந்தாலும், அவை அனைத்துமே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை என்றே சொல்லலாம். கோலிவுட்டில் வணக்கம் சென்னை என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. மிர்ச்சி சிவா மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். கலகலப்பாக நகைச்சுவை பாணியில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

we-r-hiring
இதைத் தொடர்ந்து காளிதாஸ் ஜெயராம், தான்யா ஹோப் மற்றும் கருணாகரன் ஆகியோரை வைத்து பேப்பர் ராக்கெட் என்ற இணைய தொடரை இயக்கியிருந்தார். இந்த வெப் தொடரும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் புதிய திரைப்படம் தான் காதலிக்க நேரமில்லை.

இத்திரைப்படத்தில் ஜெயம்ரவி நாயகனாக நடிக்க நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லட்சுமி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அண்மையில் அறிவித்திருந்தது. இந்நிலையில், காதலிக்க நேரமில்லை திரைப்படத்திலிருந்து முதல் கிளிம்ப்ஸ் வீடியோ நாளை வௌியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ