Homeசெய்திகள்சினிமாராகவாலாரன்ஸ், எஸ் ஜே சூர்யா கூட்டணியின் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' ...... லேட்டஸ்ட் அப்டேட்!

ராகவாலாரன்ஸ், எஸ் ஜே சூர்யா கூட்டணியின் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ …… லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா, நாசர், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு 8 ஆண்டுகள் கழித்து ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா மற்றும் மலையாள நடிகை நிமிஷம் சஜயன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சந்தோஷ நாராயண இசையமைத்துள்ளார்.

6 மாதங்களுக்கு முன்பாக இதன் அறிவிப்பு டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
அதைத்தொடர்ந்து இந்த படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் கேரளா பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதும் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

மேலும் ஆக்சன் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம், ஜிகர்தண்டாவின் முதல் பாகத்தை போல் விறுவிறுப்புடன் கூடிய ட்ரெண்ட் செட்டர் படமாக அமையும் என்று படக்குழுவினர் உறுதியளித்துள்ளனர்.

இதை தொடர்ந்து, இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ