Homeசெய்திகள்சினிமாபிரபுதேவா படத்தில் கஜோல்... 27 ஆண்டுகளுக்கு பின் இணையும் ஜோடி....

பிரபுதேவா படத்தில் கஜோல்… 27 ஆண்டுகளுக்கு பின் இணையும் ஜோடி….

-

- Advertisement -
27 ஆண்டுகளுக்கு பிறகு மின்சார கனவு கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும், நடன இயக்குநராகவும் வலம் வருபவர் பிரபு தேவா. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் பஹீரா. வில்லனாக பல கெட்டப்பில் வந்து ரசிகர்களை மிரட்டி எடுத்திருப்பார் பிரபுதேவா. இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து, விஜய் நடிக்கும் 68 வது படத்தில் பிரபுதேவா ஒப்பந்தமாகியுள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் பல படங்களில் நடித்த விஜய் தற்போது அவருடனே இணைந்து நடிக்கிறார்.

we-r-hiring
இதையடுத்து அவர் மேலும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளார்.இப்படத்தை ராஜேந்திர ராஜன் தயாரிக்கிறார். டிரான்ஸ்மீடியா நிறுவனம் படத்தை வழங்குகிறது. சக்தி சிதம்பரம் இயக்கும் இப்படத்தில் மடோனா செபாஸ்டியன் நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படத்திற்கு ஜாலியோ ஜிம்கானா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர பேட்ட ரேப் என்ற திரைப்படத்திலும் பிரபுதேவா நடித்து வருகிறார்.

இந்நிலையில், மின்சார கனவு படத்திற்கு பிறகு மீண்டும் நடிகர் பிரபுதேவா மற்றும் கஜோல் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளனர். தெலுங்கு இயக்குநர் சரண் தேஜ் பாலிவுட்டில் இயக்கும் இத்திரைப்படத்தில் நசிருதீன் ஷா, சம்யுக்தா மேனன், ஆதித்யா ஷீல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தின் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். கிட்டத்தட்ட மின்சார கனவு வெளியாகி 27 ஆண்டுகள் கழித்து மீண்டும் பிரபுதேவா, கஜோல் கூட்டணி இணைந்துள்ளது.

MUST READ