- Advertisement -
கலைஞர் நூற்றாண்டு விழா வரும் டிசம்பர் மாதம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாகக் கொண்டாட சிறப்பு ஏற்பாடுகளை திமுகவினர் செய்தனர். தமிழக அரசு சார்பிலும் நூற்றாண்டு விழாவைப் பிரமாண்டமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவைத் தமிழ்த் திரையுலகம் சார்பிலும் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பிரமாண்ட விழா அடுத்த மாதம் சென்னையில் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் செய்து வருகின்றனர்.



