Homeசெய்திகள்சினிமா'இந்தியன் 2' படத்திற்கு பிறகு சங்கரிடம் ஸ்ட்ரிக்டாக மாறிய கமல்ஹாசன்!

‘இந்தியன் 2’ படத்திற்கு பிறகு சங்கரிடம் ஸ்ட்ரிக்டாக மாறிய கமல்ஹாசன்!

-

- Advertisement -

கடந்த 1996 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் திரைப்படம் வெளியானது. இந்த படம் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 'இந்தியன் 2' படத்திற்கு பிறகு சங்கரிடம் ஸ்ட்ரிக்டாக மாறிய கமல்ஹாசன்!இதன் காரணமாக இந்தியன் 2 திரைப்படத்தை இயக்க திட்டமிட்டார் சங்கர். அதன்படி கமல்ஹாசன், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், எஸ் ஜே சூர்யா, பாபி சிம்ஹா ஆகியோரின் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கினார். லைக்கா நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் கடந்த ஜூலை 12ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே கலகையான விமர்சனங்களை பெற்று வந்தது. அதை தொடர்ந்து 12 நிமிடங்கள் இந்தியன் 2 படத்தில் இருந்து டிரிம் செய்யப்பட்டது. இதன்பிறகு இந்தியன் 2 படத்தை காண வந்த ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் 300 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தியன் 2 திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியை பெறவில்லை என்று கமல்ஹாசன் அப்செட்டில் இருக்கிறாராம். 'இந்தியன் 2' படத்திற்கு பிறகு சங்கரிடம் ஸ்ட்ரிக்டாக மாறிய கமல்ஹாசன்!இதனால் கமல்ஹாசன், சங்கரிடம் ஸ்டரிக்டாக மாறிவிட்டாராம். அதாவது இரண்டு பாடல்களைத் தவிர இந்தியன் 3 படப்பிடிப்பு முழுவதும் ஏற்கனவே நிறைவடைந்து விட்டதாம். இன்னும் ஆறு மாதங்களில் படத்தை வெளியிட பட குழு திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் கமல்ஹாசன், இன்னும் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று சங்கரிடம் கூறியிருக்கிறாராம். இதற்கு சங்கர் ஒப்புக் கொண்டால்தான் அடுத்த முடிவுகளுக்கு கமல் ஓகே சொல்வாராம். ஏற்கனவே இந்தியன் 2 திரைப்படத்தின் இறுதியில் இடம் பெற்றுள்ள இந்தியன் 3 படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ