spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசும்மாவே வீடு ரெண்டாகும், இப்ப வீடே ரெண்டாயிருச்சு... பரபரப்பை கிளப்பும் கமல்!

சும்மாவே வீடு ரெண்டாகும், இப்ப வீடே ரெண்டாயிருச்சு… பரபரப்பை கிளப்பும் கமல்!

-

- Advertisement -

இந்த முறை பிக்பாஸில் இரண்டு வீடுகள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் ட்ரெண்டான 16 நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களை ஒரு வீட்டிற்குள் அனுப்பி வைத்து வெளி உலக தொடர்பில்லாமல் அவர்கள் எப்படி 100 நாட்கள் சமாளிக்கிறார்கள் என்பதே பிக்பாஸ் வீட்டின் அம்சம்.

we-r-hiring

வெளிநாட்டில் துவங்கப்பட்ட பிக்பாஸ் அசுர வெற்றி பெற்றது. அதையடுத்து தமிழுக்கும் கொண்டு வரப்பட்டது. தமிழில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

மேலும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதால் அந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு அபரிமிதமாக உள்ளது. 5 சீசன் முடிந்துள்ள நிலையில் தற்போது 6-வது சீசன் விரைவில் துவங்க உள்ளது. அதற்கான ப்ரோமோக்கள் வெளியாக ஆரம்பித்து விட்டன.

இந்த சீசனில் ஒரு வீடு இல்லையாம், இரண்டு வீடுகள் உள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சும்மாவே வீடு இரண்டாகும் இப்ப வீடு இரண்டாயிருச்சு என்ன ஆகப்போகுதோ என்று கமல் வசனம் பேசி விட்டு செல்கிறார். எனவே இந்த முறையும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியாளர்கள் குறித்த அனுமானங்களும் துவங்க ஆரம்பித்துவிட்டன. வரும் நாட்களில் எந்ததெந்த போட்டியாளர்கள் உள்ளே போகப்போகிறார்கள் என்று தெரிய ஆரம்பித்துவிடும்.

MUST READ