Homeசெய்திகள்சினிமாஆளவந்தான் திரைப்படம் ரி ரிலீஸ்... ட்ரைலர் இன்று வெளியானது...

ஆளவந்தான் திரைப்படம் ரி ரிலீஸ்… ட்ரைலர் இன்று வெளியானது…

-

கமல்ஹாசன் நடிப்பில் ரி ரிலீஸ் ஆகவுள்ள ஆளவந்தான் படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் கல்கி 2898 AD திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் பிறகு தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களை வினோத் இயக்கும் புதிய படம் ஒன்றில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். கமல்ஹாசனின் 233 வது திரைப்படமான இந்த படத்திற்கு தற்காலிகமாக KH233 என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதனை கமல்ஹாசன் மற்றும் R மகேந்திரன் இணைந்து ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கின்றனர். இது சம்பந்தமான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது.
கமல்ஹாசன் மற்றும் எச் வினோத் கூட்டணியில் விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதன் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே மணிரத்னம் இயக்கத்திலும் கமல் நடிக்கிறார். 69-வது பிறந்தநாள் கொண்டாடும் கமல்ஹாசனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வரும் டிசம்பர் 8-ம் தேதி உலகம் முழுவதும் ஆளவந்தான் திரைப்படம் மறுவெளியீடு செய்யப்படுகிறது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 2001ம் ஆண்டு கமல் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் ஆளவந்தான். சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் தற்போது ரீ ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது. வின்டேஜ் லுக்கில் இருக்கும் கமல்ஹாசன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ