spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகமல்ஹாசனின் புது லுக்..... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

கமல்ஹாசனின் புது லுக்….. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

-

- Advertisement -

உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தனது சிறுவயதிலிருந்தே நடிப்பு வாழ்க்கையை தொடங்கி திரைத்துறையில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறார்.

இவரது நடிப்பில் கடைசியாக இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. அதைத்தொடர்ந்து இவர், மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். நாயகன் படத்திற்கு பிறகு இணைந்த இந்த கூட்டணி தக் லைஃப் படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமாகும். இந்த படம் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தது கமல்ஹாசன், சண்டே பயிற்சியாளர்களான அன்பறிவ் இயக்கத்தில் தனது 237 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் நடிகர் கமல்ஹாசன், ஏஐ தொழில்நுட்பம் படிப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளார். கமல்ஹாசனின் புது லுக்..... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!அவர் சென்னை திரும்பியதும் KH237 படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் நடிகர் கமல்ஹாசன்,தனது சமூக வலைதள பக்கத்தில் புதிய லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, “புது லுக்குடன் புதுப்பயணம்” என்று பதிவிட்டுள்ளார். எனவே இந்த லுக், அன்பறிவ் படத்திற்கான லுக்காக இருக்கலாம் என்று ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ