விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் டப்பிங் பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. இதனை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய் லோகேஷ் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளதால் ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா சஞ்சய் தத் அர்ஜுன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இதனை தயாரித்துள்ள நிலையில் அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதன் செகண்ட் சிங்கிள் இன்று மாலை 6 மணி அளவில் வெளியாக இருக்கிறது.

மேலும் தற்போது ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற கான்செப்ட்டை கோலிவுட்டில் தொடங்கியுள்ளார். இவரின் கைதி, விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக அமைந்திருந்தது. அதனால் லியோ திரைப்படமும் LCU விற்கு கீழ் வருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் லியோ படத்திற்காக டப்பிங் பேசி உள்ளதாகவும் கமலுடன் விஜயும் உடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் லியோ படம் கன்பார்ம் எல்சியூ தான் என்று ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


